• மேல்மணவூர் தேசிய அறிவியல் தினம்.

·         மேல்மணவூர் தேசிய அறிவியல் தினம்

·         மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் அறிவியல் விழிப்புணர்வு.

     கேள்வி கேட்பது தான் அறிவியலின் முதல் படி; பதிலை தேடுவது அதன் பயணம். கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஒருஏன்?’ என்ற சிறிய சந்தேகத்திலிருந்து தொடங்குகின்றன. என்பதற்கேற்ப ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேல்மணவூரில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

     மாணவர்களின் ஆர்வம், ஆய்வு மனப்பான்மை, கண்டுபிடிப்பு திறன் வளர்க்கும் நோக்கில் அறிவியல் வினாடிவினா, திருக்குறள் போட்டிகள், பசுமை விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு கதை கூறல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

     இந்நிகழ்வுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் சுகுமார், முரளி, வழிகாட்டி ஆசிரியர் சிலம்பரசி, பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் கோமதி, ஊசூர் அரசு மருத்துவர் கவிப்பிரியா மற்றும் RBSK குழுவினர் இணைந்து முன்னெடுத்தனர்.

     துளிர் திறனறிதல் தேர்வு மற்றும் பிற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

     அனைவராலும் தேசிய அறிவியல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாணவர்கள் சர் சி.வி.ராமன் அவர்களின் முகமூடி அணிந்து, ஆடல்பாடல் என பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் அறிவியல் விழிப்புணர்வை பரப்பி விழாவை சிறப்பித்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.