• வேலூர் மாவட்டத்தில் 9,213 இடங்களில் சுவர் விளம்பரங்கள் அகற்றம்.
· தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 9,213 இடங்களில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பர பதாகைகள் அகற்றம்.
· இது தொடர்பான 44 புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்மன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அரசு மற்றும் பொதுக்கட்டடங்கள், தனியார் இடங்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை அரசு மற்றும் பொது இடங்களில் 6,130 இடங்களிலும், தனியார் இடங்களில் 3,083 இடங்களிலும் என மொத்தம் 9,213 இடங்களில் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன.
இவற்றில் அரசு மற்றும் பொது இடங்களில் எண்.40 காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 2,057 இடங்களிலும், எண்.43 வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,522 இடங்களிலும், எண்.44 அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 1,005 இடங்களிலும், எண்.45 கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 690 இடங்களிலும், எண்.46 குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 856 இடங்களிலும் என 6,130 இடங்களில் விளம்ரபங்கள் அகற்றப்பட்டுள்ளன.
தனியார் இடங்களில் எண்.40 காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 587 இடங்களிலும், எண்.43 வேலூர் சட்டமன்ற தொகுதியில் 1,051 இடங்களிலும், எண்.44-அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 172 இடங்களிலும், எண்.45- கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 513 இடங்களிலும், எண்.46-குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 760 இடங்களிலும் என 3,083 இடங்களில் விளம்ரபங்கள் அகற்றப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருவதால் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சுவர் விளம்பரங்கள் தொடர்பான 44 புகார்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment