• வேலூர் சான்றளிக்கப்பட்ட விளம்பரங்களை வெளியிட வேண்டும்.

·        நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுதேர்தல் 2026-ல் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இயங்கும் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவால் சான்றளிக்கப்பட்ட விளம்பரங்களை மட்டுமே மின்னணு ஊடகங்களில் வெளியிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் விளம்பரங்களை மின்னணு ஊடகங்களில் (Television, FM, Social Media, Bulk SMS and Voice Message) வெளியிட அனுமதி வழங்கிடவும், வாக்குப்பதிவு  நாள் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் (Silent Period-48 Hours) நாளிதழ்களில் வெளியிட அனுமதி வழங்கிடவும், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்கள் ஆகியவற்றை கண்டறியவும் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மாவட்ட ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு

இக்குழு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில், துணைஆட்சியர் (முத்திரைத்தாள்), தேசிய தகவல் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தூர்தர்ஷன் செய்தியாளர், மற்றும் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஆகியோர் உறுப்பினராகவும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடக விளம்பரங்கள் தெடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகங்கள்  பின்பற்ற வேண்டிய வழி முறைகள்

வேலூர் மாவட்ட ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு (MCMC) மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்கள் மற்றும் காட்சிகளை மட்டுமே மின்னணு ஊடகங்களில் (Television, FM, Social Media, Bulk SMS and Voice Message) அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் வெளியிட வேண்டும்.

ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியில்லாத தேர்தல் விளம்பரங்களை எக்காரணம் கொண்டும் மின்னணு ஊடக நிறுவனங்கள் வெளியிடவோ / ஒளிபரப்பவோ கூடாது. மேலும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியினர் நேரடியாக தேர்தல் குறித்த விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிட அனுமதி கோரி விண்ணப்பிக்க கூடாது.

நாளிதழ்களில், போட்டியிடும் வேட்பாளர்களால் அல்லது அவர்கள் சார்ந்து வெளியிடப்படும் விளம்பரங்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டண விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வேட்பாளரின் செலவினத்தில் சேர்க்கப்படும்.

வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் (Silent Period-48 Hours) அச்சு ஊடகங்களில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெறப்பட்ட விளம்பரங்களை மட்டுமே வெளியிட வேண்டும்.

வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் (Silent Period-48 Hours) மின்னணு ஊடகங்களில் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது.

விளம்பரச் சான்று பெற விண்ணப்பிக்கும் முறைகள்

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்று நாட்களுக்கு முன்பாகவும், பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள், பிற அமைப்புகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் 7 நாட்களுக்கு முன்பாகவும் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களின் மீது 48 மணிநேரத்திற்குள் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு சான்றளிக்கப்படும்.

               விளம்பரங்கள் தனிப்பட்ட பிற நபரையோ, கட்சியினையோ குறித்து விமர்சனங்கள் செய்யக்கூடாது. பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறையினை விமர்சிக்கக்கூடாது. விளம்பரங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, வன்முறையை தூண்டும் விதமாகவோ (சாதி, மத, இன) இருக்கக்கூடாது.

               விளம்பரத்திற்கான கட்டணத்துடன் அதன் அளவு, எண்ணிக்கை, தயாரிப்பு செலவினம் உட்பட இதர வகை செலவினப் பட்டியுடன் விண்ணப்பிக்க வேண்டும். விளம்பரத்திற்கான கட்டணம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களின் படி கணக்கீடு செய்யப்படும். அனுமதி பெற்ற / அனுமதிக்கப்பட்ட விளம்பரத்தினை மட்டுமே அச்சிடவோ, ஒளிபரப்பவோ வேண்டும். அனுமதி பெற்ற எண்ணை கண்டிப்பாக விளம்பரத்தில் தெரியும் வண்ணம் இடம்பெற செய்ய வேண்டும்.

அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் விளம்பர வடிவமைப்பு / வீடியோ ஆகியவற்றை இரண்டு நகல்கள் இணைக்க வேண்டும். விளம்பரங்களில் இடம்பெற வேண்டிய வாசகங்கள், காட்சிகள் மற்றும் பாடல்வரிகளை அச்சுவடிவில் விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://vellore.nic.in/ லிருந்தும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். 

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.