• வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டம்.
· வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் மூன்றாவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் அனைக்கட்டு திமுக வேட்பாளர் நந்தகுமார், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் மற்றும் மதிமுக, கம்யூனிஸ்ட்கள், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர். இதில் வேலூர் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுகம் செய்யப்பட்டார்.
இக்கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் பேசுகையில்,
இந்த முறையும் நாம் ஒற்றுமையுடன் பணியாற்றி வேலூரில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயனை வெற்றி பெற செய்ய வேண்டும். காரணம் பீகாரில் பாஜக ஆசை வார்த்தை கூறி நிதிஷ்குமாரை முதல்வராக்குவதாக சொல்லி அவரை தற்போது ராஜசபா உறுப்பினராக்கிவிட்டது. ஆனால் இங்கோ அப்படியல்ல. மீண்டும் திமுக வெற்றி பெறும் தேர்தலுக்கு பின்னர் பாஜக கூட்டணி கற்கண்டை போல் உடைந்து காணாமல் போகும் என பேசினார்.

Comments
Post a Comment