• வேலூரில் மஹாவீரர் ஜெயந்தி.
· வேலூரில் மஹாவீரர் ஜெயந்தி.
· மேளதாளங்கள் முழங்க குதிரைகளுடன் ஊர்வலம்.
வேலூர் மாவட்டம், வேலூர், பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள சம்பவ்நாத ஜெயின் ஆலயத்திலிருந்து மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் குதிரைகளுடன் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திருஉருவ படம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைத்து குதிரைகள் முன் செல்ல மேளதாளங்களுடன் நடனமாடி, பாடல்களை பாடியபடி, ஜெயின் சமுதாய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராஜேஷ்குமார் ஜெயின் தலைமையில், பிரகாஷ் ஜெயின் ஊர்வலத்தை துவங்கி வைக்க வேலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஊர்வலம் அந்த ஆலயத்தை அடைந்தது.
இந்த ஊர்வலத்தில் ஜெயின் மதகுரு பக்தி ரத்னா சுரிஷ் சர்ஜி உள்ளிட்ட திரளான ஜெயின் சமுதாயத்தினர் பங்கேற்று உயிர்களை கொல்லகூடாது. மது அருந்தகூடாது என மஹாவீரரின் கொள்கைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த ஊர்வலமானது காந்திரோடு, பி.எஸ்.எ.ஸ். கோவில் தெரு வழியாக மீண்டும் ஜெயின் ஆலயத்தில் நிறைவடைந்தது.
பேட்டி: பக்தி ரத்னா சுரிஷ் சர்ஜி (ஜெயின் மத குரு)


Comments
Post a Comment