• வேலூர் வாக்குசாவடி மையங்களை தேர்தல் அலுவலர் ஆய்வு.

·        தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களை வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர்  பார்வையிட்டு ஆய்வு.

            தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொணவட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காகிதப்பட்டரை மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், இராமலிங்கம் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், கஸ்பா மாநகராட்சி மத்திய ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் மற்றும் கஸ்பா சேர்வை கே.மாசிலாமணி மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி  மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையத்தில் மின்சார வசதி, இருக்கைகள், வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஏதுவாக அடிப்படை வசதிகள் குறித்தும், மாற்று திறனாளிகளுக்கான சாய்தள வசதி போன்றவற்றை உறுதிசெய்ய  வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகளை  உடனடியாக ஏற்படுத்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

        இந்த ஆய்வின்போது கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், உதவி இயக்குநர் (நில அளவை) குமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கரன்,  தேர்தல் வட்டாட்சியர் ரமேஷ்  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.