• வேலூரில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாள்.

·        வேலூரில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாள்.  

·        5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.             

      வேலூர் மாவட்டம், வேலூர் ஆர்.என்.பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈகை திருநாளாம் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை கூறி மகிழ்ந்தனர்.

   ஈகை திருநாளான இன்று குர்பானி கொடுத்து உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   இதேபோன்று மாவட்டத்தில் பள்ளிகொண்டா, பேர்ணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய பகுதிகளிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.