விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பஸ் கட்டணத்தை முதலமைச்சர் உயர்த்த வேண்டும்


 விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பஸ் கட்டணத்தை முதலமைச்சர் உயர்த்த வேண்டும் 

                  வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை 
 

வேலூர், மே. 30-
 

                   வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் விஜய கோவிந்தராஜன் கூறியதாவது; 
 

                   தமிழ்நாட்டில் பொதுமக்களுக்காக தனியார் பஸ் சேவை 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 1925ம் ஆண்டு தனியார் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் தொழில் என்றால் அது பஸ் தொழிலை கூறலாம். 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டீசல் விலை ரூ.67.23 ஆக உயர்ந்தது. அப்போது தனியார் பஸ் கட்டண உயர்வு ஒரு கிலோமீட்டருக்கு 42 பைசாவில் இருந்து 58 பைசாவாக உயர்த்தப்பட்டது. அதில் இருந்து இதுவரை தனியார் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 

               இதுகுறித்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.  டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்றைய டீசல் விலை ரூ.100.86 ஆகும். 
மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் கலால் வரி, செஸ் வரியை குறைக்க வேண்டும். அதேபோல மாநில அரசு வாட் வரியை குறைக்க வேண்டும். ஏனென்றால் இந்த பஸ் தொழிலை நம்பி பஸ் உரிமையாளர்கள், பஸ் தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்பவர்கள் என  7 லட்சம் குடும்பத்தினர் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
 

                   ஒடிசாவில் தனியார் பஸ் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 90 பைசா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகியவற்றில் தலா ரூ1.10 பைசா என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தான் குறைந்த கட்டணத்தில் தனியார் பஸ்கள் இயங்குகின்றன. எனவே 
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப தனியார் பஸ் கட்டணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப்விஜய், உயர்த்த வேண்டும். 
 

பேட்டியின் போது செயலாளர் ரவி, துணை செயலாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் தண்டபாணி, நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.