அ.ம.மு.க. வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமனம்


 அ.ம.மு.க. வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராக சதீஷ்குமார் நியமனம்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்

காட்பாடி, மே.30-
 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் மாநகர மாவட்ட  செயலாளராக பிரம்மபுரத்தைச் சேர்ந்த பி.கே.ஆர்.சதீஷ்குமாரை கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நியமித்துள்ளார். 

 அதைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பி.கே.ஆர். சதீஷ்குமார் வேலூர் பழைய  மாநகராட்சி அருகே உள்ள அண்ணாசிலை, எம்.ஜி.ஆர். சிலை,  பெரியார் சிலை, மக்கான் அம்பேத்கர் சிலை, காட்பாடி ஓடைபிள்ளையார் பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை, சித்தூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைகளுக்கு நிர்வாகிகளுடன் சென்று நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட  செயலாளர்  ஏ.ஞானசேகர் முன்னிலை வகித்தார்.காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் பி.பாபு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் 
வி.டி.தர்மலிங்கம், காட்பாடி எஸ்.ராஜா, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர்
பூபாலன், மாவட்ட அவைத்தலைவர்கமலநாதன், துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர்சுந்தரமூர்த்தி, 
காட்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.குமார், பகுதி செயலாளர்கள்
ரவி, நீலகண்டன், திருவலம் பேரூராட்சி செயலாளர் விஜயபாஸ்கர், மாவட்ட மாணவர் அணி செயலாளர்சத்தியராஜ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேஷ், தகவல்தொழில்நுட்பபிரிவு செயலாளர் எம்.பி.ஏழுமலை, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் வி.எஸ்.முரளி, மாற்றுதிறனாளி அணி செயலாளர் சாமுவேல், ஊராட்சி செயலாளர்கள்  சசிகுமார், அமல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.