காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைச்சர் வி.காந்திராஜ் திறந்து வைத்தார்

 காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைச்சர் வி.காந்திராஜ் திறந்து வைத்தார் 

காட்பாடி, மே.31-
 

காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் வி.காந்திராஜ் திறந்து வைத்தார்.


காட்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் எம். சுதாகர். காட்பாடி காந்திநகர் 4வது கிழக்கு மெயின் ரோட்டில் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மக்களின் குறைகளை கேட்பதற்காக அலுவலகம் புதிய பொலிவுடன் சீரமைக்கப்பட்டு  திறப்பு விழா நேற்று நடந்தது.
திறப்பு விழாவிற்கு காட்பாடி எம்.எல்.ஏ., டாக்டர் எம்.சுதாகர் தலைமை தாங்கினார்.
 

சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் கலந்து கொண்டு காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். 
 

விழாவில் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் நவீன், வேல்முருகன், எம்.எல்.ஏ.,க்கள் வினோத்கண்ணன், தென்றல்குமார், சிந்து, தொழிலதிபர்கள் 
பி.கே.ஜி.மனோகரன், எம்.பத்மாவதி, 
பி.கே.ஜி.செல்வராஜ், விஷ்ணு வந்தனா சுதாகர், த.வெ.க.,மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வியாபாரிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

 தொடர்ந்து சால்வை, பூங்கொத்து, மாலையை டாக்டர் சுதாகர் எம்.எல்.ஏ., வுக்கு அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.
 

விடுமுறை நாட்கள் தவிர வேலை நாட்களில் பொதுமக்கள் தங்கள் குறைகளை காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என டாக்டர் சுதாகர் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.