• வேலூர்12-வது தேசிய கைத்தறி தினவிழா.
· வேலூர்12-வது தேசிய கைத்தறி தினவிழா - மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்து 15 பயனாளிகளுக்கு ரூ.4.72 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை போற்றும் வகையிலும் கைத்தறி நெசவாளர்களின் பங்கினை கௌரவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் பெருமையை போற்றும் விதமாக தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதலாவது தேசிய கைத்தறி தினம் தமிழ்நாட்டில் 07.08.2015 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ், டி.கே.எம். மகளிர் கல்லூரியில் 12-வது தேசிய கைத்தறி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கைத்தறி ரக உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் கூட்டுறவு சங்க 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.2,50,000/- மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகள், தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க 5 உறுப்பினர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை ரூ.2,00,796/-க்கான ஆணைகள், கைத்தறி ஆதரவு திட்டத்தின்கீழ் 5 நெசவாளர்களுக்கு தலா ரூ.4,300/- வீதம் ரூ.21,500/- மதிப்பிலான தறி உபகரணங்கள் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.4,72,296/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்ததாவது.
தேசிய கைத்தறி தினமான இன்றைய நாளை கொண்டாடும் விதமாக அனைவரும் கைத்தறி உடையை அணிந்து வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்றைய தினத்தில் கைத்தறி ரக உற்பத்தி பொருட்களை அதிகளவு உற்பத்தி மற்றும் விற்பனை மேம்படுத்த ஊக்கவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு நெசவாளர்களுக்கு அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கைத்தறி ரக உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்தும்போதுதான் வளர்ச்சி ஏற்படும்.
நாம் உடுத்தும் கைத்தறி உடைகள் உற்பத்திக்கு பின் ஒரு பெரிய கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உள்ளது. நான் குடியாத்ததில் உள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அப்பொழுது கைத்தறி உற்பத்தி பொருட்களின் முழு வடிவமைப்பு செயல்முறையை செய்து காண்பித்தனர். அந்த வடிவமைப்பு செயல்முறை அவ்வளவு எளிதானல்ல. அவர்களது கடின உழைப்பு அந்த வடிவமைப்பில் தெரிந்தது. பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கிடையில் கைத்தறி உற்பத்தி பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், கோப்ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பி.ஸ்டாலின், உதவி இயக்குநர் (கைத்தறி) பொ.தமிழ்செல்வன், கைத்தறி அலுவலர் சு.ஜெகதீசன், கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.பானுமதி, 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment