• மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027

·         மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை சிறப்பாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள இடங்களையும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பினை மேற்கொள்ள உள்ளனர் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 மேற்கொள்ளப்படுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை சிறப்பாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக (II Phases) நடைபெற உள்ளன. முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, சுய கணக்கெடுப்பு 17.07.2026 முதல் 31.07.2026 வரையும் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் மூலம் கணக்கெடுப்பு 01.08.2026 முதல் 30.08.2026 வரையும் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாமக்கள் தொகை கணக்கெடுப்பு பிப்ரவரி மாதம் 2027  நடைபெற உள்ளது.

         முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுவதும் டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளன. முதற்கட்டமான வீடுகள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து கோரப்பட்டுள்ள 33 கேள்விகளுக்கு தங்களது கைப்பேசி வாயிலாக (Android/iPhone) மிகவும் எளிய முறையில் டிக் செய்து தங்களது சுய விவரங்களை வழங்கலாம். இப்பணி 31.07.2026 அன்று உடன் முடிவடைகிறது, பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்தவுடன் தங்களது கைப்பேசிக்கு வரப்பெறும் 12 இலக்க பிரத்யேக எண் (ID)-ஐ பாதுகாப்பாக வைத்து வீடுதோறும் கணக்கெடுக்க வரும் கணக்கெடுப்பாளர்களிடம்   12 இலக்க பிரத்யேக எண் (ID)-ஐ கொடுக்க வேண்டும். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் (அரசு ஆசிரியர்கள்) 01.08.2026 முதல் 30.08.2026 வரை நேரடியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகள், பேருராட்சி பகுதிகள், நகராட்சி பகுதிகள் என அனைத்து இடங்களையும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பினை மேற்கொள்ள உள்ளனர். மேற்படி வீட்டு பட்டியல்கள் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு  01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும் எனவும், கணக்கெடுப்பாளர்கள் வரும்போது பொதுமக்கள் அவர்கள் கேட்கும் விவரங்களுக்கு உரிய பதலினை வழங்கி ஆதரவு அளிக்குமாறும் மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அரசின் பணி மட்டுமல்ல, இது நம் அனைவரின் பொறுப்பு "நானும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கு கொள்கிறேன் - நம் எதிர்காலத்தை உறுதி செய்கிறேன்" என்ற உறுதியுடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.