• வேலூர் 21.08.2026 தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

·        வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் 21.08.2026 அன்று    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான (Micro Job Fair) வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நடத்திட இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவுறுத்தப்பட்டதின் அடிப்படையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வருகிற 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு பெறவுள்ளது. இந்நிறுவனங்களுக்கு 10th, 12th, ITI, DIPLOMA, DEGREE  ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலைநாடுனர்கள் கலந்து கொள்ளலாம்.

ஆகவே. தனியார் துறை பணிகளுக்கு தகுதியும். விருப்பமும் உள்ள நபர்கள் வருகின்ற 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை வேலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.