• சுதந்திர தினத்தன்று 247 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்.
· சுதந்திர தினத்தன்று வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சி தலைவர்.
சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2026 சுதந்திர தினத்தன்று காலை 11.00 மணியளவில் தவறாமல் கிராம சபை கூட்டம் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.
இக்கிராம சபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்.,
|
பொருள் 1 |
: |
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் |
|
பொருள் 2 |
: |
தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் |
|
பொருள் 3 |
: |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2026-27ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார (VB-GRAM (G)) திட்டத்தின் கீழ் தொழிலாளர் வரவு செலவு திட்டம் குறித்து விவாதித்தல். |
|
பொருள் 4 |
: |
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II |
|
பொருள் 5 |
: |
சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் |
|
பொருள் 6 |
: |
ஜல் ஜீவன் திட்டம் |
|
பொருள் 7 |
: |
தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் |
|
பொருள் 8 |
: |
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்-கிராம சபா கூட்டப் பொருள் |
|
பொருள் 9 |
: |
கால்நடை பராமரிப்புத்துறை சுதந்திர தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு 2026 |
|
பொருள் 10 |
: |
வேளாண்மைத் துறை சுதந்திர தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு 2026 |
|
பொருள் 11 |
: |
இதர பொருட்கள் |
மேற்படி, கிராம சபைக்கூட்டங்களில் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிராம சபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்தும், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தும் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment