• வேலூர் குடும்ப அட்டைதாரர் கைவிரல் ரேகை சிறப்பு முகாம்.
- வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்ய வேண்டும் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து தங்களது உரிமையினை உறுதி செய்திடவும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment