• வேலூர் மாநகராட்சி பூங்கா, நாற்றங்கால் பண்ணை.

·        வேலூர் மாநகராட்சி பூங்கா மற்றும் நாற்றங்கால் பண்ணை - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு செய்தார். 

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பூங்கா மற்றும் நாற்றங்கால் பண்ணை குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சி, மண்டலம் 2,  வார்டு 28, எல்.ஐ.சி காலனியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

              இந்த ஆய்வின்போது மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை பார்வையிட்டார். பூங்காவை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் மேம்படுத்துவது குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் சுற்றுசூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் பூங்கா வளாகத்தில் புதிய மரக்கன்றுகள்  நடவு செய்ய அறிவுறுத்தினார். பூங்காவை அழகுபடுத்தும் விதமாகப் பசுமையான புல்வெளிகள் மற்றும் நவீன தோட்டக்கலை வடிவமைப்புடன் அழகுபடுத்த  அறிவுறுத்தினார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் உயர்தரமான விளையாட்டு உபகரணங்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பூங்காவிற்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதியை முழுமையாக கருத்தில் கொண்டு, அவசியமான அடிப்படை வசதியான கழிவறை வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தினார்.

எதிர்கால நீர் சேமிப்பை கருத்தில் கொண்டு, பூங்காவில் மழைநீர் உறிஞ்சும் குழிகளை முறையாக அமைக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் சுற்றுசூழல் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாநகராட்சி, வார்டு 27, சத்துவாச்சாரியில் உள்ள 4 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மரக்கன்றுகளின் தரம் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்கள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் எளிதில் பயனடையும் வகையில், இந்த நாற்றாங்கால் பகுதியை மேலும் நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தி மேம்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் பயன்பாடு: பொதுமக்களுக்கு தேவையான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் எளிதில் கிடைக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்து, இப்பகுதியை முழுமையான மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், வேலூர் வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.