• வேலூரில் உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு.
· வேலூரில்உலகமக்கள்தொகைகணக்கெடுப்பு - மாவட்டஆட்சியர்லீலாஅலெக்ஸ்நேரில்துவங்கிவைத்தார்.
· மாவட்டம் முழுவதும் 2,686 நபர்கள் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர் - ஆட்சியர் லீலா அலெக்ஸ் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூரில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை வீடுவீடாக கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் சத்துவாச்சாரி இரண்டாவது மண்டலத்தில் ஆர்.டி.ஓ. சாலையில் வீடுகளுக்கு நேரடியாக சென்று பணியை அவரே துவங்கினார்.
இதில் வீட்டின் உரிமையாளர்களிடம் 37 கேள்விகள் கேட்கப்பட்டு அவைகள் பதிவிடப்படுகிறது. ஆன்லைனில் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரையில் வீடு வீடாக 2,686 களப்பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு கணக்கெடுப்பை செய்கின்றனர். களப்பணியாளர்களை கண்காணிக்க கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்
பெரும்பாலும் கணக்கெடுக்கும் பணியில் ஆசிரியர்களைதான் பெரும்பாலும் நியமித்துள்ளோம். தவறுகள் நடக்காது. மேலும் களப்பணியாளர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் களப்பணியாளர்களுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென ஆட்சியர் கூறினார்.
இக்கணக்கெடுப்பு பணி துவக்கத்தின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மண்டலம் இரண்டு அலுவலர் வெங்கடேசன், வட்டாட்சியர் பழனி, மாநகராட்சி ஆணையர் சுல்தானா ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments
Post a Comment