• வேலூர் வேளாண்மை உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி.

·        வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வழங்கப்படவுள்ள உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சியில்  கலந்து கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்(வேபொ). அரசு இயந்திர கலப்பை பணிமனை பயிற்சி மையத்தில் நடைபெற உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து நடத்தும் உதவி டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி (Assistant Tractor Operator Training) 27 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மேற்படி பயிற்சிக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக மதிய உணவு மற்றும் உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும், டிராக்டர் ஓட்டுநர் பயிற்சிக்கு பின்னர் டிராக்டர் ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற்று தரப்படும். ஏற்கனவே LMV ஓட்டுநர் உரிமம் இருக்க கூடாது.

 மேற்படி இப்பயிற்சி 10.08.2026 அன்று தொடங்க இருப்பதால் இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ள விவசாயி மற்றும் இளைஞர்கள் வேலூர் மாவட்டம், தொரப்பாடி, தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் உள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, அரசு இயந்திர கலப்பை பணிமனை, அலுவலகத்திற்கு நேரில் வந்து புகைப்படம்-1. ஆதார் அட்டை நகல் -1  மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம், மேலும் கூடுதல் விவரங்களுக்கு 8012242236 மற்றும் 9444251153 என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.