• ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள்.
· சமூக நல துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணிபுரிந்திட பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.
தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் (24X7) பணிபுரிந்திட பாதுகாவலர் (Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
பாதுகாவலர் (தொகுப்பூதியம்-Rs. 12,000/-) காலிபணியிடத்திற்கான கல்வி தகுதி 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி. மற்றும் பல்நோக்கு உதவியாளர் (தொகுப்பூதியம்-Rs. 10,000/-) காலி பணியிடத்திற்கான கல்வி தகுதி - 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி / தோல்வி, நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராகவும், மையத்தினை தூய்மையாக பராமரித்திடவும், உள்ளுரைவோரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்பவராகவும் இருத்தல் அவசியம்.
மேலும், மேற்கண்ட பணியிடங்களுக்கு 35 வயதிற்கு மிகாமலும், உடல் ஊனம் அற்றவராகவும், உள்ளூர் விண்ணப்பதாரராகவும் மற்றும் 2 வருடத்திற்கு மேலாக முன்அனுபவம் பெற்ற பெண் பணியாளராகவும் இருத்தல் அவசியம்.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (www.vellore.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 21-08-2026 அன்று மாலை 5.00 மணிக்குள் வேலூர் மாவட்ட ஆட்சியரககத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment