• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்களிடம் 630 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளார்ச்சி துறை, நகராட்சி நிருவாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சார துறை சார்பான குறைகள், மாற்று திறனாளிகள் நல துறை. மருத்துவ துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 630 மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் செவித்திறன் குறைபாடுடைய 2 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.3,850/- வீதம் ரூ.7,700/- மதிப்பில் நவீன காதொலி கருவிகளும், இயக்கத்திறன் குறைபாடுடைய 1 மாற்று திறனாளிக்கு ரூ.76,800/- மதிப்பில் செயற்கை கால் அவையம் என மொத்தம் 3 மாற்று திறனாளிகளுக்கு ரூ.84,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், மாவட்ட சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் 1-ன்கீழ் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.15,000/- வீதம் ரூ.2,10,000/- மதிப்பில் கல்வி உதவி தொகையும், 47 பயனாளிகளுக்கு தலா ரூ.15,000/-வீதம் ரூ.7,05,000/- மதிப்பில் சிறுதொழில் புரிய கடனுதவிகளும் என மொத்தம் 61 பயனாளிகளுக்கு தலா ரூ.15,000/-வீதம் ரூ.9,15,000/- மதிப்பில் கல்வி உதவி தொகை மற்றும் சிறுதொழில் புரிய கடனுதவிகளுக்கான ஆணையினை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
மாண்புமிகு முதலமைச்சர் 10.11.2024 அன்று வெளியிட்ட அறிவிப்பில் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்க்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில் அமைந்துள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 2015-ஆம் ஆண்டு நடந்த விபத்தில் உயிரிழந்த 2 நபர்களின் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் வரை மாதந்தோறும் ரூ.2000/- உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையினை குழந்தைகளின் தாய் மற்றும் காப்பாளரிடம் வழங்கினார்.
முன்னதாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2026 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், உதவி ஆணையர் (கலால்) குணசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானகுரு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் சேதுராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அருண்பிரசாத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment