• கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் வாழ்த்து.

 ·         ஞானபீட விருது பெற்ற வைடூரியம் வாழ்க - கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் வாழ்த்து

      வேலூர், ஞானபீட விருது பெற்ற கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு தமிழியக்கம் சார்பில் வி..டி. பல்கலைகழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

       அதில் கவிஞரும், வேலூர் மாவட்ட மூத்த பத்திரிகையாளருமான எஸ்.கே.எம்.மோகன் கலந்து கொண்டு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு வாழ்த்து மடல் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது;

 

அங்கம்மாளின் வைரத்திற்கு ஞானபீட விருது!

அளவில்லா வைரங்களையும், முத்துக்களையும்

தன் பெயரில் வைத்திருக்கும்

தமிழ்ச்செம்மலுக்கு விருது!

ஞானத்தின் விழுதுக்கு இலக்கியத்தின் ஒப்பற்ற விருது!

கால் நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழன் கையில்!

ஞானபீட விருதால் மகா கவிஞனுக்கு ஆனந்தம்!

கூடுதல் ஆனந்தமாக விண்ணில் இருந்து

வாழ்த்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்!

இது, ராமசாமி மகனுக்கு கோவிந்தசாமி மகன் எடுக்கும் விழா!

கவிவேந்தருக்கு வி..டி வேந்தர் நடத்தும் பாராட்டு விழா!

வடுகபட்டி விவசாயிக்கு கொத்தகுப்பம் விவசாயியின் பாசவிழா!

நற்றமிழ் நாயகருக்கும்,

தமிழியக்கத்தின் தலைவருக்கும்தான் என்னே ஒற்றுமை!

கிராமத்தில் பிறந்த ஆளுமைகள் கடின உழைப்பால் இன்றுஉலக நாயகர்கள்!

கல்வி பணிக்காக வி..டி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு டாக்டர் பட்டம்!

இலக்கியப் பணிக்காக கவிப்பேரரசு வைரமுத்துக்கு டாக்டர் பட்டம்!

பல்கலைகழகங்கள் போட்டி போட்டு வழங்கி மகிழ்ந்தன!

இந்த விழா இலக்கிய டாக்டருக்கு, கல்வி டாக்டர் எடுக்கும் அன்பு விழா!

இலக்கியத்தில் உச்சம் தொட்ட இன்முக நாயகனை

உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் சதாசிவம் பாராட்டுகிறார்!

சதா இலக்கியமே என வாழ்ந்து வரும் இலக்கியச்சுடரை

ஐயா சதாசிவமே வந்து பாராட்டுகிறார்!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் திரைப்பயணம்

1980-ல் 'இது ஒரு பொன் மாலைப்பொழுது' பாடல் மூலம்  தொடக்கம்!

பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது இந்தப் பாடல்!

தொடக்கமே 'சிக்சர்' தான் இந்த 'நவரச நாயகனுக்கு'!

பத்மஸ்ரீ, பத்மபூஷன், தமிழக அரசின் சிறந்த பாடல் ஆசிரியர் விருது, கலைமாமணி விருது, கலைவாணர் விருது, பாவேந்தர் விருது என விருதுகள் இவருக்கு மகிழ்ந்து வந்து மகுடம் சூடின!

இந்தியாவின் சிறந்த பாடல் ஆசிரியர் விருதை 7 முறை வென்ற ஒரே தமிழன், இந்தியன்!

இவரின் 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' என்ற பாடல் சிங்கப்பூர் அதிபர் திரு.நாதன் அவர்கள் மறைவின்போது அஞ்சலி கீதமானது!

இவர் கவிதையில் மட்டுமல்ல, புதினத்திலும் சாதனை படைத்த சரித்திர திருமகன்!

'மூன்றாம் உலகப்போர்' நாவலுக்காக உலகின் சிறந்த நாவலுக்கான விருது! 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலுக்காக

'சாகித்ய அகாடமி' விருது!

'இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்' மூலம் இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை விதைத்த தன்மானத் தமிழன்!

விருதுகள் உங்களுக்கு விருந்தாகட்டும்! வாழ்த்துக்கள் அருமருந்தாகட்டும்!

கவிப்பேரரசு வைரமுத்து என்னும் 'வைடூரியம்'

இன்னும் பல உயரிய விருதுகள் பெற்று

வாழ்க வளமுடன், நலமுடன், பல்லாண்டு!

அன்புடன் வாழ்த்தி மகிழும்

கவிஞர் எஸ்.கே.எம்.மோகன் எம்.., வேலூர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு நன்றி தெரிவித்து கவிப்பேரரசு வைரமுத்து அனுப்பி உள்ள செய்தியில்,

  எஸ்.கே.எம்.மோகன், வேலூர். உங்கள் அழகான வாழ்த்தை வாகனத்திலேயே படித்தேன். உங்கள் இதயத்தின் அன்பு மொழியாகி இருக்கிறது; தமிழ் மீது கொண்ட காதல் கவிதையாகி இருக்கிறது. உங்கள் அன்புக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் தொண்டு. அன்போடு வைரமுத்து.

 என கூறி உள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.