• பேர்ணாம்பட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்.

·        பேர்ணாம்பட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு, ஆய்வு.

        உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு  முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

            அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்கீழ்  பேர்ணாம்பட்டு ஊராட்சி  ஒன்றியம், மொரசப்பல்லியில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் திட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிரினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   இந்த ஆய்வின்போது  பயிர்  காப்பீடு , உரம் , பாசன வசதி குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், டி.டி.மோட்டூர் ஊராட்சியில் ரூ.9.07 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது பணியாளர்களின் வேலை நேரம் குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், பயிர் விளைச்சலை அதிகபடுத்தும், பயிர் ஊக்கி குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து டி.டி.மோட்டூர் ஊராட்சி, செர்லபள்ளி கிராமத்தில் உள்ள காப்ராபாத் ஏரியின் கரையை பலப்படுத்துதல் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றுதல் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                பின்னர் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும்         இ-சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சான்றுகளையும் துரித முறையில் விண்ணப்பம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பங்களாமேடு பகுதியில் இயங்கி வரும் ஐ.இ.எல்.சி அறிவுசார் குறைபாடுடையோருக்கான உண்டு உறைவிடப் பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாணவர்களின் கற்றல் திறன், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், 3 மாற்று திறனாளிகளுக்கு ரூ.28,050/- மதிப்பில் சக்கர நாற்காலி, சிறப்பு நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பங்களாமேடு கூட்டுறவு நியாய விலை கடையை பார்வையிட்டு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும்  தரத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் ஏரிக்குத்தி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.33.3 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது சாலையின் தடிமன், உயரம் உள்ளிட்ட அளவீடுகள் மற்றும்  சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஏரிக்குத்தி ஊராட்சியில் ரூ.11 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிழற்குடையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து ஏரிக்குத்தி கிராம நிர்வாக அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பதிவேடுகளை பார்வையிட்டார்.

பின்னர் ஏரிக்குத்தி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில்  கட்டப்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கார்கூர் ஊராட்சியில் அயோத்திதாசர் பண்டிதர் கிராம வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் எண்ணிக்கை, எடை, ஊட்டச்சத்து நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து கார்கூர் ஊராட்சியில் உள்ள  30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்து, முறையாக குளேரினேசன் செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார்.  

பின்னர் செண்டத்தூர் ஊராட்சியில் VB GRAM G திட்டத்தின்கீழ் ரூ.29.70 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு  கொண்டு வர அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செண்டத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை பார்வையிட்டார். அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளின் எண்ணிக்கை, எடை, ஊட்டச்சத்து நிலை குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து பேர்ணாம்பட்டு வட்டம், அழிஞ்சிகுப்பம் அரசினர் மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.148.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அரசினர் மேல்நிலை பள்ளியை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை  கேட்டறிந்தார்.

பின்னர் பேர்ணாம்பட்டு வட்டம், மசிகம் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-2026ன்கீழ் ரூ.81,000/- மானியத்தில் பயனாளி பயிரிடப்பட்டுள்ள டிராகன் பழத் தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது  இயற்கை உரம், மகசூல், உற்பத்தி முறை குறித்து கேட்டறிந்தார். மேலும், நீர் பாசன வசதி கேட்டறிந்தார்.

தொடர்ந்து பேர்ணாம்பட்டு வட்டம், எருக்கம்பட்டு சாலையில் 4TPT  கொள்ளளவு கொண்ட திடக்கழிவு மேலாண்மை  மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து பேர்ணாம்பட்டு வட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் விலங்குகள் நல வாரியம் 2025-26 ஆம் ஆண்டு திட்டத்தின்கீழ் ரூ.46 இலட்சம் மதிப்பில்  கைவிடப்பட்ட, நோயுற்ற, முதிய மற்றும் பலவீனமான விலங்குகளுக்கான தங்குமிடத்தின் (Dog Shelter)  கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பின்னர் பேர்ணாம்பட்டு நகராட்சியில் 7 டன் கொள்ளளவு கொண்ட மக்கா குப்பைகள் (நெகிழி) மற்றும் திடக்கழிவுகளை சேகரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                இந்த ஆய்விற்கு பின்னர் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.  மேலும் வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.34,000/- மதிப்பில் திருமண உதவி தொகைகளும், வேளாண்மை நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்துடன் துவரை மற்றும் உளுந்து  விதைகள், தோட்டக்கலை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ஆடி பட்டம் காய்கறி விதை தொகுப்பும், 1 பயனாளிக்கு பிரதம மந்திரி விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கொடி வகை காய்கறி சாகுபடிக்கு நிரந்தர பந்தல் அமைக்க ரூ.75,000/-கடனுதவியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.15,700/- மதிப்பில் சக்கர நாற்காலி, 1 பயனாளிக்கு ரூ.7,300/- மதிப்பில் சிறப்பு நாற்காலி, 1 பயனாளிக்கு ரூ.9,360/- மதிப்பில் நிற்கும் உதவி சாதனம் என 3 பயனாளிகளுக்கு ரூ.32,410/- மதிப்பில் சக்கர நாற்காலி, சிறப்பு நாற்காலி, நிற்கும் உதவி சாதனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் பேர்ணாம்பட்டு வட்டம், பேர்ணாம்பட்டு சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது  மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை  ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியா, மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, இணைஇயக்குநர் (வேளாண்மை) ஸ்ரீவித்யா, இணைஇயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) (பொ) மரு.அந்துவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) சுவாதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், உதவி இயக்குநர் உமாசங்கர், உதவி இயக்குநர் (தோட்டக்கலை துறை) கிருத்திகாதேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால்,  வட்டாட்சியர் தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.