• வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இலட்சினை உலக சாதனை நிகழ்வு .

  • வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சியின் இலட்சினையாக (Logo) மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு  நடைபெற்றது.

வேலூர் நகராட்சி 1.8.2008 அன்று முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருவதை முன்னிட்டு அதனை பெருமைப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் 1,558 தூய்மை பணியாளர்களைக் கொண்டு Triumph World Record - நிறுவனத்துடன் இணைந்து வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் மாநகராட்சியின் இலட்சினையாக (Logo) தூய்மை பணியாளர்கள் நின்ற உலக சாதனை நிகழ்வு  நடைபெற்றது.

வேலூர் மாநகராட்சியானது 1866-ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வந்து கடந்த 01.08.2008-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான எண்ணற்ற சேவைகளை செய்து  வருகின்றது.

பொறியியல் பிரிவு மூலமாக தரமான சாலைகள் அமைக்கப்பட்டும், மழைநீர் வடிகால் கால்வாய் நல்ல முறையில் அமைக்கப்பட்டும்,பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டும் வரப்படுகிறது. நகரமைப்பு பிரிவு மூலமாக பொதுமக்களுக்கு கட்டிட அனுமதியும் வழங்கப்பட்டு வருகிறது வருவாய் பிரிவு மூலமாக வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் வரிவிதிப்பு செய்யப்பட்டு வரிவசூல் செய்யப்படும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 பொது சுகாதார பிரிவு மூலமாக பிறப்பு, இறப்பு பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும் பணி திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படி திடக்கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு  திடக்கழிவு மேலாண்மை மையங்களில் உரமாக்கும் பணி (செழிப்பு-பசுமை உரம்) மேற்கொள்ளப்பட்டு பசுமை உரம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

          கோவிட் 19 பெருந்தொற்று காலங்களில் பொது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தொற்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவமனை அமைத்தும் சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் மகுடம் சூட்டும் வகையில் வேலூர் மாநகராட்சி 1558 தூய்மை பணியாளர்கள் மூலமாக Triumph World Record நிறுவனத்துடன் இணைந்து நேதாஜி விளையாட்டு அரங்கில் மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது

பின்னர் அந்நிறுவனம் இவ்வுலக சாதனை நிகழ்வை அங்கீகரித்து மாவட்ட ஆட்சி தலைவர்-டம் உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை பி.எஸ்.லீலாஅலெக்ஸ் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மு.ம.வினோத் கண்ணன் (வேலூர்), மரு.ம.சுதாகர் (காட்பாடி), மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,  மாநகராட்சி துணை மேயர் மாசுனில்குமார், மண்டலகுழு தலைவர் புஷ்பலதாவன்னியராஜா   மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப் குமார், மாமன்ற உறுப்பினர்கள் கா.சு.சண்முகம், சரவணன் Triumph World Record நிறுவனத்தின் தலைமை நடுவர். சு.கிருஷ்ணகுமார் ஒருங்கிணைப்பாளர் பி.நிக்ஷன், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.