• பேர்ணாம்பட்டு வட்டத்தில் காலை உணவு திட்டம் ஆய்வு.

·        உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம்,  பேர்ணாம்பட்டு வட்டத்தில் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பேர்ணாம்பட்டு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

                அதன் தொடர்ச்சியாக பேர்ணாம்பட்டு வட்டத்தில் காலை உணவு திட்டம் குறித்தும், பள்ளி, அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

                வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்கீழ் பேர்ணாம்பட்டு வட்டம், மேல்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி ஆய்வு செய்தார்.

                இந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளிடம் உணவின் சுவை, தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், உணவு பொருள் இருப்பு அறையில் உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மற்றும் ஒப்புவித்தல் திறன்களை கேட்டறிந்து, மாணவ, மாணவிகளை பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

                தொடர்ந்து மேல்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளின் எண்ணிக்கை, உயரம், எடை, ஊட்டச்சத்து நிலை, மருத்துவ முகாம் குறித்து கேட்டறிந்தார். மேலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து மேல்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம்  மருத்துவ வசதி, மருத்துவரின் அணுகுமுறை, சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவரிடம் சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். குழந்தை பெற்ற தாய்மார்களிடம் உடல்நலம், சிகிச்சை முறைகள், வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

 இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ்பாபு உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.