• விளையாட்டு போட்டிக்கு சென்ற மாணவிகள் மீது கார் மோதி விபத்து
· வேலூர் அருகே வட்டார விளையாட்டு போட்டிகளுக்கு சென்ற மாணவிகள் மீது கார் மோதி விபத்து - 7 மாணவிகள் காயம்.
· அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
வேலூர் மாவட்டம், தொரப்பாடி அரசினர் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் வட்டார விளையாட்டு போட்டிக்காக ஊசூர் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பின்னர் மீண்டும் அவர்கள் தொரப்பாடி அரசு பள்ளிக்கு சாலையில் நடந்து வந்த போது பின்பக்கமாக வந்த கார் மாணவிகளின் மீது மோதியது. இதில் எட்டாம் வகுப்பு மாணவிகள் வர்ஷா, சுஜாதா, ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் சிவானி, ஷர்மிதா, அர்ஷிதா, ரூபிகா, அன்சிகா ஆகிய 7 மாணவிகளும் காயமடைந்தனர்.
காயமடைந்த 7 மாணவிகளும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து அரியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments
Post a Comment