• வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தடை.
· வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசானது கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள்/பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் கொடிகள், தெர்மாகோல் கொண்டு செய்யப்பட்ட கப்புகள்/ தட்டுகள் உட்பட 14 வகையான பொருட்களை பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் அரசாணை வாயிலாக தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளது. மேலும் விதி மீறல்களில் ஈடுபடுபவருக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 ன் பிரிவு 55, 58 ன் வாயிலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆளான பொருட்களைக் கொண்டு உணவு பொருட்களை பரிமாறவும், பேக்கிங் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மேற்கண்ட விதிகளை மீறும் உணவு வணிகர்களுக்கு முதல் முறை 5000 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை விதி மீறல்களில் ஈடுபடுபவருக்கு 10,000 ரூபாய் அபராதமும் மற்றும் மூன்றாவது முறை விதிமீறல்களில் ஈடுபடுபவருக்கு 15,000 ரூபாய் அபராதம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு வணிக பதிவு/உரிமைத்தினை ரத்து செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே உணவு வணிகர்கள், பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்காலான பொருட்களை பயன்படுத்தவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது எனவும் நமது சுற்றுசூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட உணவு சம்பந்தமான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு / கலப்படம் குறித்து 9444042322 என்ற whatsapp எண் மூலமாக புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment