• கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி.
· கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி - போக்குவரத்து பாதிப்பு.
வேலூர் மாவட்டம், வேலூர், புதிய பேருந்து நிலையம் அருகே சென்னை - பெங்களூர் மேம்பாலத்தில் சென்னையிலிருந்து ஆம்பூருக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கார் அதிக வேகமாக சென்றது. அது சாலையை கடக்க முயன்றவர் மீது மோதியதில் முதியவர் இழுத்து செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்தினால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் மெக்கானிக் என தெரிய வருகிறது. காரில் வந்தவர்கள் தப்பி சென்றனர்.
இந்த விபத்து காரணமாக வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments
Post a Comment