• வேலூர் மாநகராட்சி அடிப்படை வசதிகள் ஆட்சியர் ஆய்வு.

  • வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து   மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு மேற்கொண்டார். 

                வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நீரேற்று நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

                வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, வேலூர் மாநகராட்சியின் குடிநீர் வழங்கல் தொடர்பான பணிகளை ஆய்வு செய்தார்.   இந்த ஆய்வின்போது, SDRF நிதியின் கீழ் ரூ.403.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள முக்கிய குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

குடிநீர் வழங்கலின் அளவை அதிகரிக்கும் வகையில், பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள 100 HP திறன் கொண்ட இரண்டு டர்பைன் பம்புகளை புதிய பம்புகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள இன்ஃபில்ட்ரேஷன் கிணறுகளில் 10 பம்புகள், 15 HP மோட்டார்கள், பேனல் போர்டுகள் மற்றும் ஸ்டார்டர்களுடன் மாற்றப்பட உள்ளன. மேலும், மொத்தம் 25 போர்வெல்களில் 18 போர்வெல்களுக்கு புதிய மோட்டார்கள் மற்றும் தேவையான ஸ்டார்டர் பேனல்கள், கேபிள்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.  மேலும், பொன்னை தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வேலூர் மாநகரம் வரையிலான பிரதான நீர்க்குழாய் பாதை ஆய்வு செய்யப்பட்டு, தேவையான இடங்களில் சேதமடைந்த குழாய்களை மாற்றுதல் மற்றும் போதுமான Air Valve-களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். தலைமை நீரேற்று நிலைய பகுதிகளில் காணப்படும் நீர் கசிவுகளை உடனடியாக சரிசெய்யவும், மேற்கண்ட அனைத்து பணிகளையும் 3 மாத காலத்திற்குள் நிறைவு செய்யவும் அறிவுறுத்தினார். ரூ.403.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் நிறைவு பெறுவதன் மூலம் பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தின் நீர் உற்பத்தி மற்றும் நீரேற்று திறன் மேம்படுத்தப்பட்டு, வேலூர் மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

தொடர்ந்து வேலூர் மாநகராட்சி, முத்துமண்டபம் அருகில் உள்ள 10.28 MLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தொடர்ச்சியான குளோரினேஷன் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், Sludge Centrifugal Pump-ஐ உடனடியாக இயக்கத்திற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு அறிவுறுத்தினார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் உள்வரவு மற்றும் வெளிவரவு கழிவுநீர் அளவுகள் Online Continuous Effluent Monitoring System (OCEMS) மூலம் ஆய்வு செய்யப்பட்டதுடன், ஆய்வக வசதிகளை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டார். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தரம் தொடர்பான பரிசோதனை அறிக்கைகளை தொடர்ந்து பெற்று கண்காணித்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த கழிவுநீர் தரநிலைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து முத்துமண்டபம் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் அ.சுல்தானா, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.