• குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பணிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

 ·        குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

                வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர், குடியாத்தம் ஒன்றியம், மோர்தானா அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோர்தானா அணையிலிருந்து 4.20 கி.மீ நீளத்தில் 110.58 ஏக்கர் நேரடி பாசனமும், 5 கிராமங்களும் வலதுபுற பிரதான கால்வாயின் 43.50 கி.மீ நிளத்தில் 12 ஏரிகளும் 25 கிராமங்களும் 3937.63 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இடதுபுற பிரதான கால்வாய் 32.25 கி.மீ நீளத்தில் 7 ஏரிகளும், 19 கிராமங்களும் 4227.023 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மொத்தம் 8367 ஏக்கர் நிலங்கள் பாசனம் பயன்பெறும் வகையில் மோர்தானா அணையின் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது அணை பராமரிப்பு, பாதுகாப்பு, யானை போன்ற விலங்குகள் நடமாட்டம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து, மோர்தானா ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளின் வருகை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, அடிப்படை வசதிகள், மருத்துவ முகாம் மற்றும் குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

     அதனை தொடர்ந்து குடியாத்தம் ஒன்றியம், மோர்தானா ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தின் சுத்தம், அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். மேலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையினையும் கேட்டறிந்தார்.

பின்னர் தனகொண்டாபல்லி ஊராட்சிக்குட்பட்ட சைனகுண்டா கிராமத்தில் VB-GRAM (G) திட்டத்தின்கீழ் ரூ.6.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணியாளர்களிடம் பணி நேரம், பணிகள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் முதியோர் உதவித்தொகை குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து தனகொண்டாபல்லி ஊராட்சிக்குட்பட்ட சைனகுண்டா கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையை பார்வையிட்டு உணவுப் பொருள்களின் இருப்பு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குடிநீர் வசதி, அடிப்படை வசதிகள் மற்றும் நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பொருள்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து முக்குன்றம் ஊராட்சியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் முறையாக குளோரினேசன் செய்யப்படுகிறதா என கேட்டறிந்தார். நீர்த்தேக்கத் தொட்டினை சுற்றிலும் பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதி மக்களிடம் குடிநீர், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் முக்குன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் உணவு பொருட்களின் தரம், ஆசிரியர்கள் கற்பிக்கும் முறை, மாணவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள அறிவுறுத்தினார்.

தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சி கொட்டாறு ஆற்றின் நடுவே ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், நீர்வள துறை செயற்பொறியாளர் சோபனா, உதவி செயற்பொறியாளர் கோபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ஜெயசுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், குடியாத்தம் வட்டாட்சியர் பிரியா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா மற்றும் மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.பரந்தாமன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.