• தொரப்பாடியில் இலவச கண்புரை பரிசோதனை முகாம்.
· தொரப்பாடியில் தமிழக புரட்சி கழகத்தின் சார்பில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் - முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர், தொரப்பாடியில் தமிழக புரட்சி கழகத்தின் சார்பில் கரிகிரி மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண்புரை பரிசோதனை முகாமினை முன்னாள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.
இதில் மாநில மருத்துவ அணி அமைப்பாளர் தமிழரசன், நிறுவன தலைவர் இக்பால், மாநில இளைஞரணி அமைப்பாளர் முக்தியார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, கண்புரை உள்ளது போன்றவை எல்லாம் பரிசோதிக்கப்பட்டது. இதில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களை கரிகிரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கண் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இந்த இலவச முகாமில் நூற்று கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Comments
Post a Comment