• கவிஞர் இலக்குமிபதி மண்ணுக்குள் வானம் நூல் வெளியீடு.

 

·         கவிஞர் இலக்குமிபதி எழுதிய மண்ணுக்குள் வானம் நூல் வெளியீட்டு விழா.

     வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் வள்ளலார் நேரு நகர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கவிஞர் .இலக்குமிபதி, ராகவேந்திர ஸ்வாமிகள் எழுதியமண்ணுக்குள் வானம்” என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

     இந்த விழாவில் மேத்தா, மணிவண்ணன், ரங்காபுரம் சம்பத், சண்முகம், அண்ணாமலை, சாமிராமன், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் நிர்வாகிகள் ரவி, பன்னீர்செல்வம், வேலூர் வாசகர் வட்ட நிர்வாகிகள் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ராஜன்பாபு வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அப்பாஜி சாமிகள் நூலை வெளியிட திருவள்ளுவர் பல்கலைகழக துணைப்பதிவாளர் ரமேஷ் பெற்று கொண்டார்.

     இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் கவிஞர் பொன்செல்வகுமார், கவிஞர் மோகன், கவுன்சிலர் கணேஷ், சங்கர், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மைக்கோ பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

     நூலை எழுதிய கவிஞர் ச.இலக்குமிபதி இதுவரை 28 நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.