• காமக்கூர் புராணம் நூல் - கவிஞர் லக்குமிபதி வெளியீடு.


 ·         காமக்கூர் புராணம் நூல் - கவிஞர் லக்குமிபதி வெளியீடு.

     ஆரணி அடுத்த காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜை நடைபெற்றது. இந்த யாக சாலை பூஜையில் வேலூர், காமக்கூர் தமிழ் ஆசிரியர் கா.ஞானசக்திவேலன் தொகுத்த காமக்கூர் என வழங்கும் காம நகர் புராணம் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

      விழாவிற்கு ஆர்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கவிஞர் எஸ்.கே.எம். மோகன் முன்னிலை வகித்தார்.

   சிறப்பு விருந்தினராக வேலூர் வாசகர் வட்ட செயலாளர் கவிஞர் .லக்குமிபதி கலந்து கொண்டு காமக்கூர் புராண நூலை வெளியிட்டு சிறப்புரை  ஆற்றினார். அவருக்கு ஆசிரியர் ஞானசக்திவேலன் 'வேலூர் விரிவுரை வித்தகர்' விருதை வழங்கி ஏற்புரை நிகழ்த்தினார்.

     நூல்களை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சி.வேலாயுதன், காமக்கூர் ஆர்.சரவணன், வேலூர் வே..சிவமூர்த்தி ஆகியோர் பெற்று கொண்டனர். முடிவில் ஆசிரியர் சு.ரவி நன்றி கூறினார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.