• வேலூரில் நபிகள் நாயகம் பிறந்த நாள்.
· வேலூரில் நபிகள் நாயகம் பிறந்த நாள்
· மிலாடி நபி விழாவான இன்று இஸ்லாமிய மக்கள் 1000 கிலோ அரிசி கொண்டு உணவு சமைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடர் அன்னதானம்.
வேலூர் மாவட்டம், வேலூர், சார்பனாமேடு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் தொடர் அன்னதானம் வழங்குவார்கள்.
அதேபோன்று இந்த ஆண்டும் 1000 கிலோ அரிசி கொண்டு உணவு சமைத்து சாதி மத பாகுபாடில்லாமல் அனைத்த தரப்பு மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கி சென்றனர்.
மிலாடி நபி திருநாளான இன்று காலை முதல் இரவு வரையில் மக்கள் பசியாற உணவளித்து இந்த தொடர் அன்னதானம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


Comments
Post a Comment