• வேலூர் மாவட்டத்தில் கலை போட்டிகள்.

·        வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில்,
5  வயது முதல் 16  வயது வரையிலான மாணவ, மாணவியர்களுக்கு  கலை போட்டிகள் 08.08.2026 அன்று நடைபெறவுள்ளது -
மாவட்ட ஆட்சி தலைவர்.

தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டு துறை, தமிழ்நாடு சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 2025-2026-ம் ஆண்டிற்கான வேலூர் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகிய பிரிவுகளில் வருகின்ற 08.08.2026 அன்று கலை 09.30 மணிக்கு,  சி.எஸ்.ஐ ஊரிஸ் அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் 01.05.2025 அன்று 5-8 / 9-12 / 13-16 ஆகிய வயதினை நிறைவு செய்தவர்களாக இருத்தல் வேண்டும். போட்டிக்கு வருகை புரியும் நாளன்று பெயர், வயது, முகவரி ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் கொண்டு வரவேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழும், மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். 9-12 / 13-16 வயது பிரிவில் முதல் பரிசு பெறும் மாணாக்கர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நடனம் பிரிவில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்றவையும் கிராமிய நடனம் பிரிவில் தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமிய நடனங்களும் ஆடலாம்.  முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும், திரைப்படப் பாடல்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை. குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

குரலிசை பிரிவில் கர்நாடக இசை பாடல்கள், தேசியப்0பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சி பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமே/ பாட வேண்டும்.

ஓவியம் பிரிவில் 40x30 செ.மீ அளவுள்ள ஓவியத் தாள்களில் எவ்வகை வண்ண ஓவியங்களும் வரையலாம். ஓவியம் வரைய தேவையான பொருட்களை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரம் வேண்டுவோர் மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை,  காஞ்சிபுரம் – 631 502, தொலை பேசி எண். 044 - 27269148 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  கலைத்திறன் மிக்க வேலூர் மாவட்ட மாணவ / மாணவியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.