• வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்.
· வேலூரில் அகில இந்திய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்.
· சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவிகள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம், வேலூர், டோல்கேட் பகுதியில் ஜப்பான் ஷுட்டோ ராய் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளை இந்திய தலைமை கராத்தே மாஸ்டர் ரமேஷ் தலைமை தாங்கி நடத்தினார். இதில் ஆசிய நடுவர் மகேஷ் தென்னிந்திய தலைமை மாஸ்டர் லட்சு, உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இணைஇயக்குநர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு பரிசுகள், சான்றுகள், கோப்பைகளை வழங்கினார். இதில் மாணவர்கள் தங்களின் திறமைகளை போட்டியில் காட்டினார்கள்.
இதில் ஓடுகள் உடைத்தல், கராத்தே பெண் வீராங்கனையின் வயிற்றில் கருங்கல்லை வைத்து சம்மட்டியால் உடைத்தல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற பல்வேறு சாதனைகளை செய்து காட்டினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள், சான்றுகளை வழங்கினார். இதில் ஓபன் கராத்தே போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பரிசளிப்பு விழாவில் சிறை மற்றும் சீர்திருத்த நிர்வாக பயிலகத்தின் இணைஇயக்குநர் கோவிந்தராஜ் பேசுகையில்,
மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கராத்தே கற்பிக்கிறது. மேலும் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணிக்காப்பதுடன் தற்காப்பையும் கற்று கொள்கிறோம். நீங்கள் உங்கள் ஐம்புலன்களையும் அடங்கி ஆண்டு வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டுமென பேசினார்.


Comments
Post a Comment