• போதை பொருள் இல்லா தமிழ்நாடு வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்.

·        போதை பொருள் இல்லா தமிழ்நாடு குறித்த வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் எச்.ஐ.வி/  ய்ட்ஸ்  குறித்த தீவிர விழிப்புணர்வு  பிரச்சாரம் 2026 செயல் நடவடிக்கைக்களை  வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி  வைத்தார்.

                 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு குறித்த வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர்

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug free Tamil Nadu)  என்ற மைய கருத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுத்தல் குறித்து 247 கிராம ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

                இவ்வாகனம் இன்று முதல் 30.09.2026 வரை அனைத்து பகுதிகளிலும் (பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்கள்) விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரச்சுரம் வழங்கப்படும்.

                தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் எச்.ஐ.வி / ய்ட்ஸ் குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் 2026 செயல் நடவடிக்கைக்களை மாவட்ட ஆட்சி தலைவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் தொடக்கமாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகளை ஆட்டோவில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், மாவட்ட அளவில் கிராமிய கலை குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  பின்னர் விழிப்புணர்வு பிரச்சுரங்களை வெளியிட்டார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா, உதவி ஆணையர் (கலால்) குணசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு  உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.