• ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

  • ஆகஸ்ட் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

                வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2026-ஆம் மாத விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக, தமிழ்நாடு வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி, விரிஞ்சிபுரத்திலிருந்து எல்நினோ தாக்கத்தில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாத்திட எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது

வேளாண்மை துறையின் சார்பாக பயறு வகைகள் பற்றியும், விவசாயிகள் அடையாள பதிவு செய்து பயனடையவும், NMEO எண்ணெய் வித்துக்களின் திட்டம் மற்றும் இயற்கை விவசாயத்தின் பயன்கள் பற்றியும் விரிவாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது

பொறியியல் துறை மூலம் 5 கார் கலப்பை மற்றும் மணிலா உடைக்கும் கருவி வழங்கிடவும், வாழை திசு வளர்ப்பு ஆய்வகம் வேலூர் மாவட்டத்தில் அமைக்கவும், வனத்துறை மூலமாக காட்டுப்பன்றிகள், மான் மற்றும் மயில்கள் போன்ற பறவை இனங்களால் பயிர்கள் பாதிப்படைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகள் பயிர் கடனை திரும்ப செலுத்த வற்புறுத்துதல் கூடாது என கோரிக்கை வைத்தனர்.

கனிமவளம் மூலமாக மணல் கொள்ளையை தடுத்து நிலத்தடி நீர் பாதிப்பை தடுக்கவும், ஊராட்சி மூலம் ஒழையாத்தூர் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றவும், நியாய விலை கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், வார சந்தை மற்றும் தினசரி சந்தையில் சுங்க வரி வசூல் செய்யும் விவரத்தை கரும்பலகையில் பதிவிடவும் கோரிக்கை வைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சீமகருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றவும்,  ஊசூரில் தனிப்பட்ட விவசாய நிலத்தில் உள்ள முள்புதர்கள் மற்றும் கருவேல மரங்களை அகற்றவும், நீர்வள ஆதாரத்துறை மூலமாக நாகநதியின் குறுக்கே தடுப்பணை கட்டவும், கணியம்பாடி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.

ஊராட்சிகள் மூலம் அனைத்து வரத்து கால்வாய்களையும் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவும், கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக குடியாத்தம் பகுதிக்கு மாட்டுக்கு மடி நோய் வருவதை ஸ்கேன் செய்யும் வசதியை அமைத்துத் தரவும், வன்றந்தாங்கல் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவும், திருமணி, ஒழையாத்தூர் மற்றும் பேர்ணாம்பட்டு ஏரி கால்வாயை தூர்வாரவும் கோரிக்கை வைத்தனர்.

சாத்கர் பகுதியில் மழைநீர் கால்வாயை தூர்வாரவும், பேர்ணாம்பட்டு பகுதிகளில் காலை ஏழு மணியில் இருந்து மாடுகள் அதிகமாக நடமாடுவதை மாடு பிடிக்கும் வண்டி வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கவும், அரசு போக்குவரத்து பேருந்து மேலரசம்பட்டு உள்ளே வந்து செல்லவும் மற்றும் 14ம் நம்பர் பேருந்து காலை 5.15 மணிக்கு மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் டி.அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் திருகுணஐயப்பத்துரை, இணை இயக்குநர் (வேளாண்மை) ஸ்ரீவித்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜி.லில்லிபாய், வருவாய் கோட்டாட்சியர்கள் ராம்குமார் (வேலூர்), செந்தில்குமார் (குடியாத்தம்), மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் மயில்வாகணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.