• வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.
· வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்.
· பக்தர்கள் ஹரோ ஹரா முழக்கங்களுடன் நந்தி பகவானை தரிசனம்.
· நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் - மஹா தீபாராதனை.
வேலூர் மாவட்டம், வேலூர், கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், கரும்பு சாறு, இளநீர், பன்னீர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்யப்பட்டது. பின்னர் மலர் மாலைகள், வில்வ இலைகள், அருகம்புல் மாலைகளால் அலங்காரங்களை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் அரோகரா முழக்கங்களுடன் பக்தர்கள் நந்தி பகவானை வழிபட்டனர். பின்னர் சுவாமி உட்பிரகார உலாவும் வந்தது.

Comments
Post a Comment