• வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பயிற்சி.

·        அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், வேலூரில் பயிற்சி பெற 14.08.2026 வரை விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சி தலைவர்.

.டி.. எனப்படும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் வேலூரில் உள்ள 15 தொழிற் பிரிவுகளுக்கு கடந்த  ஜீன்-26 முதல் சேர்க்கை நடைபெற்று கொண்டுள்ளது.   மாணவர்கள் சேர்க்கைக்கு கால அவகாசம் 14-08-2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்பொழுது 73 இடங்கள் காலியாக உள்ளது. இதிலுள்ள பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள், பேசிக் டிசைனர் (2), ரோபோடிக்ஸ் (17), மெசினிஸ்டு (4), மேனுபேக்சரிங்கப்ரோஜஸ் (24), கம்மியர் (மோட்டார் வண்டி) (1), டர்னர் (18), ஒயர்மேன்(1), தோல்பொருள் உற்பத்தியாளர் (மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் (6) ஆகும்.

மேற்கண்ட ஐ.டி.ஐ தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று கொண்டுள்ளது. இதில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது அசல் கல்வி சான்றுகளுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அப்துல்லாபுரத்தை அணுக தெரிவிக்கப்படுகிறது.

14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. இப்பயிற்சி நிலையத்தில் Industry 4.0 நிறுவனத்துடன் சேர்ந்து பயிற்சியாளர்களுக்கு Advanced Training வழங்கப்படுகிறது.

                விண்ணப்ப கட்டணம் ரூ. 50/- மட்டும் Debit card / Credit card / Net Banking / G-PAY / Phone pay மூலம் செலுத்த வேண்டும். 

                பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சியாளர்கள் அனைவருக்கும் உதவித்தொகை மாதம்  ரூ.750/- வழங்கப்படும். மேலும் விலையில்லா மிதிவண்டி, பாடப்புத்தகம், சீருடை, காலணிகள், வரைபடக்கருவிகள், இலவச பேருந்து சீட்டு ஆகியன வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/- பெற்று தரப்படும். உறுதியான, வேலைவாய்ப்பு வழங்கப்படும் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.