• வேலூரில் போதையில்லா தமிழ்நாடு உறுதி மொழி ஏற்பு.

·         வேலூரில் ஊரீசு கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழி ஏற்பு. 

·         தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.

         வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரியில் தமிழக முதல்வர் சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறையின் சார்பில் போதையில்லா தமிழ்நாடு மாநில அளவில் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு போதை பொருட்களை ஒழிக்க சிறப்பாக செயல்பட்ட காவலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

     இதில் வேலூரில் ஊரீசு கல்லூரில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழியை ஏற்றனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.