• காட்பாடி தெற்கு தி.மு.க கலைஞர் நினைவு நாள்.

·         காட்பாடி தெற்கு தி.மு. சார்பில் கலைஞர் நினைவு நாள்.

·         கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

     வேலூர் மாவட்டம், காட்பாடியில், காட்பாடி தெற்கு பகுதி தி.மு. சார்பில் முன்னாள் தி.மு.. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

            அதனை முன்னிட்டு காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு தெற்கு பகுதி செயலாளரும், வேலூர் மாநகராட்சி துணைமேயருமான எம்.சுனில்குமார் தலைமை தாங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினார். காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் துரைசிங்காரம், மாவட்ட பொருளாளர் நரசிம்மன்,  பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி, மாநகர துணைசெயலாளர் தேவநேசன்,  வட்ட செயலாளர்கள் சசிகுமார், சம்மந்தம், அரிகிருஷ்னண், ராஜி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ரஜினி, டீடா சரவணன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் டீக்காராமன் உள்பட பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

     அதை தொடர்ந்து காட்பாடி தெற்கு பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.