• சுதந்திர தினம் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடி வைக்க வேண்டும்.
· சுதந்திர தினம் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடி வைக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்)கட்டுப்பாட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ளமதுக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 (சனிக் கிழமை) சுதந்திர தினம் அன்றைய தினத்தில் மதுபான கடைகளை மூடி வைக்க வேண்டும் என சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட தினத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், கடைகளை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபானக்கூடங்கள் (FL1/ FL2/ FL3/ FL3A / FL3AA and FL11) அனைத்தும் மூடப்படும் எனவும், அன்றைய தினங்களில் மதுபானங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி தினங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் பணியாளர்களின் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937 மற்றும் சம்மந்தப்பட்ட இதர விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் அன்றைய தினங்களில் அனுமதி பெற்ற மதுக்கூடங்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுக்கூட உரிமதாரர்கள் மீதுஉரியகுற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment