• வேலூர் வாசகர் வட்டம் வாரியார் சிறப்பு பட்டிமன்றம்.

·         வேலூர் வாசகர் வட்டம் சார்பில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா சிறப்பு பட்டிமன்றம்.

முன்னாள் எம்.எல்.. கார்த்திகேயன் பங்கேற்பு.

     வேலூர் மாவட்டம், வேலூர் வாசகர் வட்டம் சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது.

            விழாவிற்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஆடிட்டர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஆடிட்டர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். கவிஞர் பொன். ராஜன்பாபு வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.., கார்த்திகேயன் கலந்து கொண்டு வாரியார் சுவாமிகளின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் கலந்து கொண்டு பட்டிமன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.

     வாரியார் சுவாமிகளின் நெடும் புகழுக்கு காரணம்ஆன்மீக அறப்பணியே” என்ற தலைப்பில் கவிஞர் எஸ்.கே.எம்.மோகன், சமூக சேவகர் சரவணன், “அன்னை தமிழ் பணியே” என்ற தலைப்பில் கவிஞர்கள்  பொன்.செல்வகுமார்,  ஜோசப் அன்னையா ஆகியோர் வாதிட்டனர்.

    வாரியார் சுவாமிகளின் நெடும் புகழுக்கு ஆன்மீக அறப்பணியும், தமிழ் பணியும் இரண்டுமே காரணம் என்றும், அவை இரண்டும் அவருக்கு இரு கண்கள் என நடுவர் கவிஞர் .லக்குமிபதி தீர்ப்பளித்தார்.

    விழாவில் வாசகர் வட்ட தலைவர் ரவி, ஓய்வு பெற்ற பேராசிரியர் ரத்தினம், தமிழ் ஆசிரியர் ஞான சக்திவேலன், மூத்த பத்திரிகையாளர் வேலூர் சிவமூர்த்தி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சந்துரு, கவிஞர்கள் சித்ரா, சிலம்பரசி, பேராசிரியர் பெரியசாமி, ஆறுமுகம், உமாபதி, சாந்தி, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

            முடிவில் இம்பீரியல் பஸ் உரிமையாளர் ஜெ. ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.