• வேலூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்பாட்டம்.


 ·         வேலூரில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்.

      வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வெங்கடேஷ்குமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வேலு, அரசு ஊழியர் சங்கம் ஜோஷி, கல்வி துறை அலுவலர்கள் சங்கம் சேகர் உள்ளிட்டோரும் திரளான ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

     இந்த ஆர்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களையும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட கோருதல், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட கோருதல். விடுபட்ட இடைக்கால ஓய்வூதியமாக ரூ.3,400/- ஒட்டு மொத்த தொகை ரூ.2.00 லட்சம் வழங்க கோருதல், ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட விடுபட்ட அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து உரிமைகளையும் வழங்கிட கோருதல், கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஊராட்சிகளுக்கு கூடுதல் பொறுப்பு படியை உயர்த்தி வழங்கிட கோருதல், ஊராட்சி செயலாளராக பணியாற்றி 1996-க்கு பிறகு இளநிலை உதவியாளராக பணியேற்றவர்களுக்கு ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50% ஓய்வூதியத்திற்கு எடுத்து கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஏழு ஆண்டுகள் பணி முடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள், அனைவரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்திடக் கோருதல், பணி மேற்பார்வையாளர் நிலையிலிருந்து உதவிப் பொறியாளர் பதவி உயர்வு வழங்கிடக் கோருதல். வி.பி.ஜி.ராம்ஜி திட்டத்திற்கு மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிடம் ஏற்படுத்திட கோருதல், விபி.ஜி ராம்ஜி திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையின்கீழ் தனி ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்திட கோருதல்,

     மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமாக இருந்து தற்போது வி.பி.ஜி.ராம்ஜி என பெயர் மாற்றப்பட்டுள்ள திட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட கோருதல், கணினி உதவியாளர்களுக்கு குழு காப்பீடு திட்டத்திலும்,   திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் குழு காப்பீடு திட்டம் மற்றும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்திட கோருதல், கூடுதல் இயக்குநர், இணைஇயக்குநர் நிலை பதவி உயர்வில் 1:10 என்ற அடிப்படையில் 1 நேரடி உதவி இயக்குநர் 10 பதவி உயர்வு உதவி இயக்குநர் என பதவி உயர்வு வழங்கிட கோருதல், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு 20%, ஏனையோருக்கு 10% இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்குவதில் இயக்குநர் அலுவலகத்திலும், தலைமை செயலகத்திலும் ஏற்படும் நீண்ட காலதாமதங்களை தவிர்க்க பதவி உயர்வு வழங்கும் அதிகாரத்தினை மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு வழங்கிடவும். நிலுவையில் உள்ள பணிவரன் முறை தொடர்பான கருத்துருவினை அரசுக்கு அனுப்பி உரிய உத்தரவு வழங்க கோருதல், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் 400 வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிடங்களை ஏற்படுத்தி நேரடியாக நியமிப்பதை தவிர்த்து அதற்கு பதிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையிலிருந்து பதவி உயர்வு வழங்கி நிரப்பிட கோருதல்,

     சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ள இணை இயக்குநர் பணியிடங்களையும், மாவட்டங்களில் உள்ள திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பணியிடங்களையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து உதவி திட்ட அலுவலர் பணியிடங்களையும், தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டத்தில்  உள்ள இணைஇயக்குநர், உதவி இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களை கொண்டு நிரப்பிட கோருதல். உதவி இயக்குநர், கூடுதல் இயக்குநர் பதவி உயர்வு வழங்கிட கோருதல், திட்ட இயக்குநர் பணியிடத்தில் இந்திய வனப்பணி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை இரத்து செய்ய கோருதல். ஏழு ஆண்டுகள் பணி முடித்த கூடுதல் இயக்குநர் அனைவருக்கும் இந்திய ஆட்சி பணி நிலையிலான பதவி உயர்வு வழங்கிடக் கோருதல், ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலியிடத்தில் 10 சதவிகிதம் நேரடியாக உதவி இயக்குநர்கள் நியமனம் செய்யும் அரசாணையினை இரத்து செய்து, உதவி இயக்குநர் நிலையில் மொத்தமுள்ள பணியிடங்களில் 10 சதவிகிதம் மட்டும் நேரடி உதவி இயக்குநர் நியமனங்களை மேற்கொள்ளும் வகையில் திருத்திய அரசாணை வெளியிடக் கோருதல்,

           2025-26-ஆம் ஆண்டு கூடுதல் ஒதுக்கீட்டின்படி ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செயதிடக் கோருதல், ஏழை எளிய மக்கள் வீட்டினை முழுமையாக சிரமமின்றி கட்டும் வகையில் வீடுகள் கட்டும் திட்டங்களுக்கான அரசின் அலகுத் தொகையினை ரூ.6.00 லட்சமாக உயர்த்தி வழங்கிட கோருதல், மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் கட்டும் திட்ட பணிகளை கவனிப்பதற்கு வட்டார அளவில் தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தினை ஏற்படுத்திட கோருதல், 15 வருடங்களுக்கு மேல் ஒரே பதவியில் பணிபுரிந்து வரும் உதவிப் பொறியாளர்கள் அனைவரையும் உதவி செயற்பொறியாளராக தரம் உயர்த்திடக் கோருதல்,

     பொறியியல் பிரிவுக்கு தனியாக ஈப்பு வழங்கிட கோருதல், பிமேஜி திட்டச் செயலாக்கம், எல்.ஈ.டி சோலார் விளக்குகள் பொருத்தியது சார்பாகவும், திட்ட செயலாக்கம் சார்பாகவும் வளர்ச்சி துறை அலுவலர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் விழிப்பு துறையின் நடவடிக்கைகளையும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், பழி வாங்கும் நோக்கத்தோடு அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதை கைவிட கோருதல், புகார்கள் மீது இறுதி முடிவு எடுக்க வீண் காலதாமத்தை தவிர்க்க கோருதல், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கான தீர்ப்பாயத்திற்கு பரிந்துரை செய்வதை முற்றாக கைவிட கோருதல் ஆகிய 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷிடம் மனு அளித்தனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.