• வேலூர் நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின விழா.
· வேலூர் நேதாஜி மைதானத்தில் சுதந்திர தின விழா - மாவட்ட ஆட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, 178 பயனாளிகளுக்கு ரூ.1,49,34,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம், நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்கவிட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.
பின்னர் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 178 பயனாளிகளுக்கு ரூ.1,49,34,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய 241 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, 8 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் காலை 8.40 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
காவல் துறை அணிவகுப்பு மரியாதை
வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன் காவல் துறை அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தல்
வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய 66 சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
வருவாய் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரூ.4,20,000/- மதிப்பில் விபத்து நிவாரண நிதியுதவியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் 5 மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 58 நபர்களுக்கு ரூ.1,00,00,000/- மதிப்பில் வங்கி கடன் உதவிகளும், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.12,60,000/- மதிப்பில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நிதியுதவி மற்றும் தையல் இயந்திரங்களும், வேளாண்மை துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.22,750/- மதிப்பில் நெல் விதைப்பு ஊக்கத்தொகையும், தோட்டக்கலை துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,95,000/- மதிப்பில் நிலக்கடலை நிரந்தர கல் பந்தல் அமைக்கவும், மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.3,11,400/- மதிப்பில் செயற்கை கால் அவையங்களும், தாட்கோ மூலம் 30 பயனாளிகளுக்கு ரூ.15,00,000/- மதிப்பில் கடனுதவிகளும், மாவட்ட சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.1,50,000/- மதிப்பில் சிறுதொழில் புரிவதற்கான உதவி தொகையும், தொழில் வணிக துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3,25,000/- மதிப்பில் தொழில் கடன் மான்யமும், பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ரூ.7,50,000/- மதிப்பில் 11 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தாய் தந்தை விபத்து காப்பீட்டு தொகை வைப்புநிதி பத்திரங்களும் என மொத்தம் 178 பயனாளிகளுக்கு ரூ.1,49,34,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
பாராட்டுச் சான்றிதழ்
வேலூர் மாவட்ட சரகத்திற்குட்பட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 55 நபர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் நற்சான்றுகள் வழங்கினார். மேலும் வருவாய் துறையின் சார்பில் 12 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் 13 நபர்களுக்கும், அரசு வேலூர் மருத்துவ கல்லூரியில் 8 நபர்களுக்கும், நலப்பணிகள், இணை இயக்குநர் அலுவலகத்தில் 7 நபர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 10 நபர்களுக்கும், துணை இயக்குநர் மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் (ம) குடும்ப நலம், வேலூரில் 5 நபர்களுக்கும், பள்ளிக்கல்வி துறையின் சார்பில் 14 நபர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 7 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 2 நபர்களுக்கும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் 6 நபர்களுக்கும், பொதுப்பணி துறை, (திட்டங்கள் கோட்டம்), வேலூரில் 3 நபர்களுக்கும், பொதுப்பணி துறை கட்டட (க (ம) ப) கோட்டம், வேலூரில் 3 நபர்களுக்கும், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 6 நபர்களுக்கும், நில அளவை பதிவேடுகள் துறையின் சார்பில் 5 நபர்களுக்கும், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் 2 நபர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் 2 நபர்களுக்கும், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் 2 நபர்களுக்கும், வேளாண்மை துறையின் சார்பில் 3 நபர்களுக்கும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையின் சார்பில் 2 நபர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 1 நபருக்கும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 1 நபருக்கும், நீர்வள துறையின் சார்பில் 4 நபர்களுக்கும், மாற்று திறனாளிகள் நல துறையின் சார்பில் 1 நபருக்கும், கருவூலம் மற்றும் கணக்கு துறையின் சார்பில் 3 நபர்களுக்கும், நெடுஞ்சாலை துறையின் சார்பில் 6 நபர்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 3 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் 4 நபர்களுக்கும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் 5 நபர்களுக்கும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் 1 நபருக்கும், கூட்டுறவு துறையின் சார்பில் 2 நபர்களுக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 நபர்களுக்கும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட் சார்பில் 2 நபர்களுக்கும், பேரூராட்சிகள் சார்பில் 3 நபர்களுக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 1 நபருக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 2 நபர்களுக்கும், இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் 2 நபர்களுக்கும், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், தாட்கோ சார்பில் 1 நபருக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் 3 நபர்களுக்கும், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் சார்பில் 4 நபர்களுக்கும், மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் 1 நபருக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 1 நபருக்கும், பால்வளத்துறையின் சார்பில் 1 நபருக்கும், மாவட்ட திட்ட அலுவலகம் சார்பில் 1 நபருக்கும், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் 1 நபருக்கும், தமிழ்நாடு கண்ணாடி இழைவலையமைப்பு நிறுவனம் சார்பில் 1 நபருக்கும், 108 ஆம்புலன்ஸ் சார்பில் 2 நபர்களுக்கும், மாவட்ட திட்ட அலுவலர், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் சார்பில் 1 நபருக்கும், புதிய அரசு மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகம் சார்பில் 1 நபருக்கும், மாவட்ட கண்பார்வை இழப்பு சங்கம் சார்பாக 1 நபருக்கும் என பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 241 நபர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
கலை நிகழ்ச்சிகள்
நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஈ.வே.ரா.மகளிர் மேல்நிலை பள்ளியில் 150 மாணவிகளும், கீ.வ.குப்பம் சாய் குருஜி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 160 மாணவ, மாணவிகளும், எத்திராஜ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 180 மாணவ, மாணவிகளும், புனித சிலுவை சிறப்பு பள்ளியில் 100 மாணவ, மாணவிகளும், குடியாத்தம் திருவள்ளூவர் நிதிநாடும் மேல்நிலை பள்ளியில் 160 மாணவ, மாணவிகளும், புனித மரியன்னை நிதிநாடும் மகளிர் மேல்நிலை பள்ளியில் 160 மாணவிகளும், காட்பாடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 160 மாணவிகளும், வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சமுகநீதி விடுதியில் 30 மாணவிகளும் என 7 பள்ளிகள் மற்றும் 1 விடுதியை சார்ந்த 1100 மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளின் சிறந்த கலை நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத் கண்ணன், வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் மகேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ஜெயசுதா மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment