• வேலூர் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை காணொளி காட்சி முதலமைச்சர் திறப்பு.


 ·        திருவள்ளூவர் பல்கலைகழகம் மற்றும்  கல்லூரிகளில்  ரூ.22.36 கோடி மதிப்பில்  உயர்கல்வி துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 5 முடிவுற்ற பணிகளை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

காட்பாடி வட்டம், சேர்க்காடு ஊராட்சியில் திருவள்ளூவர் பல்கலை கழகத்தில் உயர்கல்வி துறையின் சார்பில் ரூ.600 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 18 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.

            தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உயர்கல்வி துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட கட்டடங்கள் விவரம்

1.        வேலூர் மாவட்டம்,  காட்பாடி வட்டம்,  சேர்க்காடு ஊராட்சியில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் ரூ.600 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 18 வகுப்பறைகள் கொண்ட 3 புதிய  துறை கட்டடம் (சமூகவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல்)   விவரம்

வேலூர் மாவட்டம்,  காட்பாடி வட்டம்,  சேர்க்காடு ஊராட்சியில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தில் ரூ.600 இலட்சம் மதிப்பில் 18 வகுப்பறைகள் கொண்ட 3 புதிய  கட்டடம் (சமூகவியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல்)  கட்டப்பட்டுள்ளது.

            இக்கட்டடம் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் 657.96 சதுர மீட்டர் பரப்பளவில்  வகுப்பறைகள்-6, கழிப்பறை-2 ஆகிய வசதிகளுடனும், முதல்தளம் 657.96 சதுர மீட்டர் பரப்பளவில் வகுப்பறைகள்-6, கழிப்பறை-2 ஆகிய வசதிகளுடனும், இரண்டாம் தளம் 657.96 சதுர மீட்டர் பரப்பளவில் வகுப்பறைகள்-6, கழிப்பறை-2 ஆகிய வசதிகளுடனும், மூன்றாம் தளம் 35.60 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

2.      வேலூர் மாவட்டம், வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் திறன்மிகு மையத்திற்கு முன் கட்டுவாக்கப்பட்ட கட்டமைப்பு பணிமனை கட்டடம் விவரம்

            வேலூர் மாவட்டம், வேலூர் தந்தை பெரியார் அரசு பலவகை தொழில் நுட்பகல்லூரியில் திறன்மிகு மையத்திற்கு முன் ரூ.625 இலட்சம் மதிப்பில் கட்டுவாக்கப்பட்ட கட்டமைப்பு பணிமனை  கட்டடம் கட்டப்பட்டுள்ளது.  

                இக்கட்டடம் தரைதளம் மற்றும் முதல் தளம் என கட்டப்பட்டுள்ளது. தரைதளம் 1060.58 சதுர மீட்டர் பரப்பளவில் ரோபோக்கள் அறை-1, கார் பேட்டரி அறை-1, உற்பத்தி செயல்படுத்தல் அமைப்பு அறை-1, தரக்கட்டுப்பாடு அறை-1, சேர்க்கை உற்பத்தி அறை-1, புனையமைப்பு ஆய்வகம் அறை-1, பிளம்பிங் அறை-1 ஆகிய வசதிகளுடனும்,

                முதல்தளம் 368.40 சதுர மீட்டர் பரப்பளவில் சேவையக அறை-1, தயாரிப்பு வாழ்நாள் சுழற்சி மேலாண்மை அறை-1, இயந்திர அறை-1, பொருட்களின் இணையம் அறை-1, மிகச் சிறிய துளை முனையம் அறை-1, காணொளிக் கலந்துரையாடல் அறை-1  ஆகிய வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது.

3.      வேலூர் மாவட்டம், வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பலவகை தொழில் நுட்பகல்லூரியில்  6 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறை தொகுப்பு கட்டடம் விவரம்

வேலூர் மாவட்டம், வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரியில் ரூ.233.13 இலட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் மற்றும் 2 கழிவறை தொகுப்பு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடம் தரைத்தளம் 412.27 சதுர மீட்டர் பரப்பளவில் 3 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடனும்,  முதல் தளம்  325.19 சதுர மீட்டர் பரப்பளவில் 3 வகுப்பறைகளுடனும்,  இரண்டாம் தளம் (Head Room) 41.43 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது. ஆண்கள் கழிப்பறை 28.06 சதுர மீட்டர் பரப்பளவிலும், பெண்கள் கழிப்பறை 36.02 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது.

4.      வேலூர் மாவட்டம், முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் கூடுதல் 10 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள்  மற்றும்   கழிவறை தொகுப்பு (2 எண்கள்)  கட்டடம் விவரம்

வேலூர் மாவட்டம்,  முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் ரூ.528 இலட்சம் மதிப்பில் கூடுதல் 10 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள்  மற்றும் கழிவறை தொகுப்பு (2 எண்கள்)  கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடம் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் 589.86 சதுர மீட்டர் பரப்பளவில்  வகுப்பறை-1, ஆய்வகங்கள் அறை-2, ஆசிரியர் அறை-2, சேமிப்பு அறை-2, கழிப்பறை-2 ஆகிய வசதிகளுடனும்,

முதல்தளம் 571.33 சதுர மீட்டர் பரப்பளவில் வகுப்பறைகள்-5, கழிப்பறை-2 ஆகிய வசதிகளுடனும், இரண்டாம் தளம் 441 சதுர மீட்டர் பரப்பளவில் வகுப்பறைகள்-4, கழிப்பறை-1 ஆகிய வசதிகளுடனும், மூன்றாம் தளம் (Head Room) 33 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது. ஆண்கள் கழிப்பறை 28.06 சதுர மீட்டர் பரப்பளவிலும், பெண்கள் கழிப்பறை 36.02 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது.

5.      வேலூர் மாவட்டம்,  மாதனூர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.250 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைகள் மற்றும் ஆழ்துளை கிணறு கட்டடம்  விவரம்

            வேலூர் மாவட்டம்,  மாதனூர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.250 இலட்சம் மதிப்பில் 6 வகுப்பறைகள் மற்றும் ஆழ்துளை கிணறு கட்டடம்  கட்டப்பட்டுள்ளது.

                இக்கட்டடம் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.  தரைதளம் 291.37 சதுர மீட்டர் பரப்பளவில் வகுப்பறைகள்-2, கழிப்பறை-1 ஆகிய வசதிகளுடனும்,  முதல்தளம் 272.16 சதுர மீட்டர் பரப்பளவில் வகுப்பறைகள்-2, கழிப்பறை-1 ஆகிய வசதிகளுடனும், இரண்டாம் தளம் 230 சதுர மீட்டர் பரப்பளவில் வகுப்பறைகள்-2 ஆகிய வசதிகளுடனும்,  மூன்றாம் தளம் (Head Room) 33.57 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், திருவள்ளூவர் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.ஜே.செந்தில்குமார் வேல்முருகன், வளாக இயக்குநர் முனைவர் அ.ராஜசேகர், செயல் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ஆர்.பாபு ஜனார்த்தனன், சேர்க்காடு ஊராட்சி மன்ற தலைவர் பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.