• வேலூரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
· வேலூரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.
· தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேச முன்னுரிமை கொடுக்காமல் சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.
· மானிய கோரிக்கையில் எல்லா துறையின் கேள்விகளுக்கும் மூன்று அமைச்சர்களே பதில் அளிக்கிறார்கள்.
· தமிழகத்தில் சர்க்கரை, அரிசி, பருப்பு எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது
வேலூர் மாவட்டம், வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க கட்சி பொதுசெயலாளர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்
சினிமாவில் எப்படி சட்டமன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறதோ அது போன்று தமிழ்நாடு சட்டசபையில் சட்டமன்றம் நடக்கிறது. உண்மையான சட்டமன்றமாக நடக்கவில்லை. மேலும் பொதுமக்களினுடைய பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.
மறைந்த முதலமைச்சர் "அம்மா" ஜெயலலிதா கொண்டு வந்த "அம்மா உணவகம்" திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அரசும் சொல்கிறது அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்தும் என்று. இதனை பொறுத்திருந்து பார்ப்போம். பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு துறைகள் இருக்கிறது.
எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் பொழுது துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. அமைச்சர்கள் ஆதவஅர்ஜுனா, நிர்மல்குமார் மற்றும் ராஜ்மோகன் இவர்கள்தான் அதிகமாக பதில் சொல்கிறார்கள். மற்ற துறைவாரி அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. மக்களுடைய பிரச்சனையை சட்டமன்றத்தில்தான் கேட்க முடியும். ஆனால் அத்துறை அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆனால் மானிய கோரிக்கை வேறொரு அமைச்சர்தான் தாக்கல் செய்கிறார் முதல்வர் துறை சம்பந்தமாக வேறு அமைச்சர்தான் பதில் சொல்கிறார். பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டம் எதுவும் இல்லை. தமிழக வெற்றி கழகம் அரசாங்கம் அறிவிக்கவில்லை.
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் குறிப்பாக பெரிய வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. தமிழக வெற்றி கழகம் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு தற்பொழுது 100 நாட்களில் சுமார் 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். இதில் வருவாய் செலவு மட்டும் 25 ஆயிரம் கோடி இன்னமும் 1 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள். ஏற்கனவே இருந்த அரசு இப்படி தான் நிதிமேலாண்மை சரி செய்ய நிதியை கையாள குழு அமைத்தனர். திமுக ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கினார்கள். இந்த தமிழக வெற்றி கழகம் அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் நிலைக்காது. அப்படி நினைத்தால் 10 லட்சம் கோடி முதல் கடன் 20 லட்சம் கோடி கடனாக மாறிவிடும். இன்றைக்கு பருப்பு, எண்ணெய்.,அரிசி மற்றும் சர்க்கரை விலைவாசி வின்னை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. அதற்கு உணவு துறை அமைச்சர் எந்த பதிலும் சொல்லவில்லை. ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டம் என்பது கார் வாங்குவது அவரவர் விருப்பம் நான் கார் வாங்கமாட்டேன். அவர்கள் பதவியில் இருக்கும் பொழுது தான் காரை பயன்படுத்த முடியும். பதவி முடிந்த பின்பு காரை திருப்பி கொடுக்க வேண்டும். எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கார் விவகாரத்தில் அவர்கள் விருப்படி நடந்து கொள்ளலாம். ஸ்டாலினுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டது. முதல்வர் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். தி.மு.க அரசு ஆட்சியில் இருக்கும் போது அப்போது எதிர் கட்சி தலைவராக நான் இருந்தேன். நான் சட்டமன்றத்தில் பேசுவது நேரலையில் காட்ட மாட்டார்கள். அதே பாணியில்தான் இன்றைக்கு இருக்கும் தமிழக வெற்றி கழக அரசாங்கம் இன்றைக்கு அக்கட்சியில்தான் சபாநாயகர் உள்ளார். ஆளுங்கட்சிக்கு சாதகமாகதான் செயல்படுவார். ஆனால் மக்கள் பேசிகொள்வது ஆளுங்கட்சியின் அராஜகத்தை நேரலையில் காட்டுவது கிடையாது. எதிர்க்கட்சி கோரிக்கை எழுப்பும் போது அது வாக்குவாதம் ஏற்படுகிறது. அதனை காட்டுகிறார்கள் சபாநாயகர் 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்தியதாக சொன்னார். அப்படி நடத்தியது பாராட்டுக்குரியது. ஆனால் மக்களுடைய பிரச்சனைகள் இரண்டரை மணி நேரம் கூட எடுத்து கொள்ளவில்லை. ஆனால் மீறி தேவையில்லாத பிரச்சனைகளை எழுப்பி அவையின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள் என கூறினார்.

Comments
Post a Comment