• சொத்தை அபகரிக்க கொல்ல முயற்சிப்பதாக முதியவர் ஆட்சியரிடம் மனு.
· சொத்தை அபகரிப்பதற்காக மகன்கள் மனைவியுடன் சேர்ந்து தாக்கி கொல்ல முயற்சிப்பதாக முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பாதுகாப்பு வழங்கிட கோரிக்கை.
வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் முதியவர் முருகேன். இன்று மாவட்ட ஆட்சியரிடம் தன் இரண்டு மகன்கள் மற்றும் தன் மனைவி தன்னை கொலை செய்துவிட்டு சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்சிடம் நேரில் மனு அளித்தார்.
அம்மனுவில் தனது இரண்டு மகன்கள் கோட்டீஸ்வரன், பார்த்திபன், மனைவி மகாலஷ்மி ஆகிய மூவரும் சேர்ந்து என்னிடம் உள்ள சொத்து பத்திரத்தை அபகரிக்க அடித்து உதைக்கின்றனர். இவ்வாறு பலமுறை செய்தும் கடந்த 14-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது மூவரும் என்னை சரமாரியாக தாக்கி ரூ.50 ஆயிரம் பணத்தை பிடுங்கி கொண்டனர்.
மேலும் வீட்டு பத்திரத்தை கொடு, இல்லையென்றால் கொலை செய்து புதைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகேசன், ஆட்சியரிடம் மனு அளித்து தனக்கு உரிய பாதுகாப்பு உயிரை காப்பாற்றுமாறு புகார் அளித்தார்.
மனைவியும் மகன்களும் சேர்ந்து தன்னை கொல்ல முயற்சிப்பதாக மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Comments
Post a Comment