• வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சேவைகள்.
· வேலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி பொதுமக்கள் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் -மாவட்ட ஆட்சி தலைவர்.
வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.
இந்நேர்வில், புலனசெய்தி (Whatsapp) மற்றும் Facebook, Youtube, Instagram-களில் காணொளிகள் வாயிலாக மேற்படி சேவைகளை கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக தெரிவித்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றது.
எனவே, வேலூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் எவரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment