• கீ.வ.குப்பம், அரும்பாக்கம் மனுநீதி நாள் முகாம்.

·        கீ.வ.குப்பம், அரும்பாக்கம் மனுநீதி நாள் முகாம் - மாவட்ட ஆட்சி தலைவர் 184  பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே  44 இலட்சத்து  92  ஆயிரத்து 814   மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

                வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டம், அரும்பாக்கம் ஊராட்சி, அரும்பாக்கம் மோட்டூர் கல்வி உலகம் உயர்நிலை பள்ளியில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது.

 

மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சி தலைவர் 184 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 இலட்சத்து 92 ஆயிரத்து 814 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரும்பாக்கம்  ஊராட்சியில் ஏற்கனவே பெறப்பட்ட 211 மனுக்களில் 184 மனுக்கள் ஏற்கப்பட்டன. 27 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் 158  கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவரிடம் வழங்கினார்கள்.

                முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் இந்த மனுநீதி நாள் முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். 

                மனுநீதி நாள் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.1,35,00,000/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள், பட்டா மாறுதல் சான்றுகளும்,  வேளாண்மை துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3,144/- மதிப்பில் விதைகளும், தோட்டக்கலை துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.1,83,210/- மதிப்பில் சிறு துளி பல பயிர் மற்றும் ஆடி பட்டம் காய்கறி விதைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 36 பயனாளிகளுக்கு ரூ.6,46,600/- மதிப்பில் திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைளும், 10 பயனாளிகளுக்கு வகுப்பு சான்றுகள், பிறப்பு சான்றுகள், இறப்பு சான்றுகளும்,  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 35 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை மின்னணு திருத்தம் செய்ததற்கான ஆணைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.39,000/- மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலி கருவி, மூளை முடவாக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான பிரெய்லி மின்னணு வாசிப்பு கருவிகளும், 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.2000/- வீதம் ரூ.6000/- மதிப்பில்  ஊட்டச்சத்து பெட்டகங்களும்  என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.1,44,92,814/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

                மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்  சார்பில் 4 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு  தலா ரூ.50,000/- வீதம் ரூ.2,00,000/- நிதியுதவியை  மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து.சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) ஜெயசுதா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சி.மாறன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் க.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, கீ.வ.குப்பம் ஒன்றிய குழு தலைவர் லோ.ரவிசந்திரன், கீ.வ.குப்பம் வட்டாட்சியர் ர.பாலசந்தர், அரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வ.சிவக்குமார்,   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.